செவ்வாய், 1 டிசம்பர், 2009

கார்த்திகை தீபத் திருவிழா (01 டிசம்பர் 2009)

"கார்த்திகைத் திங்களில் நிறைமதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடி வரும் நாள் திருக்கார்த்திகை நாளாகும். செல்வத்தின் அதிபதி திருமாலும், கல்வியின் அதிபதி பிரம்மாவும், தம்முள் யார் பெரியவர் என வாதிட்டபடி இருந்த போது அவர்களுக்கு நடுவில் நீண்டு உயர்ந்த தீ மலையாக நின்றான் சிவபெருமான். திருமால் பன்றியாகி அடி தேடியும் பிரமன் அன்னப்பறவையாகி முடி தேடியும் தோற்றபோது தம்மால் அறியப்பட முடியாத இன்னொரு பொருளும் உண்டு என உணர்ந்து தம் செருக்கு நீங்கினர். இறைவன் ஒளி மலையாக நின்ற நிகழ்வைக் குறிப்பதே கார்த்திகை விழா.

'விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்...' என்று திருஞானசம்பந்தர் இவ்விழாவைக் குறித்துப் பாடுகின்றார். மேலும் பல பதிகங்களில் 'மாலறியா, நான்முகனும் காணா' மலை எனச் சிவபெருமான் அண்ணாமலையாக நின்ற செய்தியைக் கூறுகின்றார்.

இந்நாளில் திருவண்ணாமலையில் பெருவிளக்கு ஏற்றியும் உலகெங்கும் உள்ள சைவ அன்பர்கள் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றியும் சிவத்தை வழிபடுவர். ஒளி அறிவையும் இருள் அறியாமையையும் குறிக்கும். சிவபெருமான் அறிவின் மூலம், அவன் அறிவிக்க உயிர்கள் அறியும் என்னும் சித்தாந்தக் கோட்பாட்டை விளக்குவது கார்த்திகை விளக்கீடு."

- "சித்தாந்த சைவம்" என்ற நூலில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.

இனி செண்பக விநாயகர் ஆலய கார்த்திகை விழா காணொளியும் புகைப்படமும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக