ஞாயிறு, 19 டிசம்பர், 2010

திருவாதிரைத் திருவிழா - ஆருத்திரா தரிசனம் - 22 . 12 . 2010

அன்பர்களே,

"மார்கழித் திங்கள் மதி நிறை நாளில் திருவாதிரை நட்சத்திரம் கூடி வரும் நாள் ஆருத்ரா தரிசனத்திற்குரிய நாள் ஆகும். இந்நாளில், சிவபெருமான் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்களுக்கு ஆனந்த திருக்கூத்து ஆடிக் காட்டினான்.

சிவபெருமானின் நடனம் அவன் புரியும் ஐந்தொழில்களை விளக்குகின்றது. அவன் அசைவால் உலகங்கள் அசைகின்றன. அணுவின் உட்கூறுகளை அசைவிக்கும் இறைவன் அண்டங்களையும் அசைக்கின்றான். அசையும் அனைத்தும் இறைவனின் ஆற்றலால் அசைகின்றன.

சிவபெருமான் ஆனந்தக்கூத்தனாக ஆடும்வரை உலகின் அசைவுகள் தொடரும். அவன் ஆட்டம் நிற்கும்போது அனைத்தும் அடங்கி அவனுக்குள் ஒடுங்கும். மீண்டும் அவன் ஆட்டம் தொடங்கும் போது உலகங்கள் படைக்கப்படும்.

ஆதிரை நட்சத்திரத்தில் இறைவன் ஆடிக்காட்டியதால் சிவன் ஆதிரையான் என்னும் பெயர் பெற்றான். ஆதிரை நட்சத்திரக்கூட்டத்தை கூர்ந்து கவனித்தால் அவற்றின் அமைப்பு சிவபெருமான் ஆனந்தக்கூத்து ஆடும் காட்சியை ஒத்திருப்பதை காணலாம்." - நன்றி: சித்தாந்த சைவம் : நூல் ஆசிரியர்: முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.

திருவாதிரைத் திருவிழா - ஆருத்திரா தரிசனம் - 22 . 12 . 2010 புதன் கிழமை
ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்


காலை 4 .15 மணிக்கு - திருப்பள்ளியெழுச்சி பாராயணத்துடன் பக்தர்கள் திருவீதி வலம் வருதல்
காலை 4 .30 மணிக்கு - சிவகாமியம்பாள் சமேத ஸ்ரீ நடராஜருக்கு விஷேட ஹோமத்துடன் ஆருத்திரா அபிஷேகம்
காலை 5 .45 மணிக்கு - காலை சந்தி பூஜை
காலை 6 .00 மணிக்கு - சிவகாமியம்பாள் சமேத ஸ்ரீ நடராஜருக்கு விஷேட அலங்கார பூஜை
காலை 6 .25 மணிக்கு - திருவெம்பாவை பாடல்கள் ஓதுதல்
காலை 7 .25 மணிக்கு - சிவகாமியம்பாள் சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் திருவீதி வலம் எழுந்தருளுதல்
காலை 7 .45 மணிக்கு - ஸ்ரீ நடராஜ பெருமான் சிவகாமியம்பாள் திருக் கண்ணோக்க ஆனந்த நடனம் புரிந்து தரிசனம் அளித்தல்

சிவனின் ஆனந்த நடன தரிசனம் காண வருவீர்!
ஆனந்த அருள் பெறுவீர்.

புதன், 15 டிசம்பர், 2010

மார்கழி மாதப் பிறப்பு - அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில

அன்பர்களே,

நாளை, 16 டிசெம்பர் 2010 , வியாழன் அன்று மார்கழி மாதம் பிறக்கின்றது.

தமிழ் மாதப் பிறப்பு அன்று, அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில்,

காலை 9 .30 மணிக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

மாலை 7 .30 மணிக்கு, அடியார்கள் பங்கேற்கும் திருமுறை பாராயண திருவீதி உலா.

இந்நிகழ்வுகளில் பங்கேற்று இறை சிந்தனையில் திளைக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.

நன்றி.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

விநாயகர் சதுர்த்தி 2010

விநாயகர் சதுர்த்தி 2010

.