திங்கள், 21 டிசம்பர், 2009

மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா (20 டிசம்பர் 2009 )

மார்கழி மாத விநாயகர் சதுர்த்தி விழா ஆலய ஓதுவார் மூர்த்தி திருவரங்கையயாதி மற்றும் ஓதுவார் மகேஷ் அவர்களின் திருமுறை இசைக் கச்சேரியுடன் கூடிய கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இனி புகை படங்களும் காண் ஒளியும்:



திருஞானசம்பந்தர் அருளிய திருமாலை மாற்று - மூன்றாம் திருமுறை...



திரு நாவுக்கரசர் அருளியது. தனித் திருக்குறுந்தொகை. திருமுறை 5:90:10

விறகில் தீயினன் பாலில் படு நெய் போல்
மறைய நின்றுளன் மா மணிச்சோதியான்
உறவுகோல் நட்டு உணர்வுகயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே.

பொருள் விளக்கம்:

விறகில் தீப்போலவும். பாலிற்பொருந்திய நெய்போலவும், மாமணிச் சோதியானாகிய இறைவன் மறைய நின்றுளன் ; உறவு என்னுங்கோலை நட்டு உணர்வு என்ற கயிற்றினால் முறுகவாங்கிக் கடைந்தால் முன்னின்று அருள் வழங்குவான்.











ஞாயிறு, 20 டிசம்பர், 2009

மார்கழி மாத விழாக்கள்



* 20 டிசம்பர் 2009  ஞாயிறு மாலை 5 .15 மணிக்கு விநாயகர் சதுர்த்தி  திருவிழா

***** மாலை 5.30 மணிக்கு - சங்கல்பம், ஹோமம்
***** மாலை 6.00 மணி முதல் - விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம்
***** இரவு 7.00 மணிக்கு - மூலஸ்தான விஷேச பூஜை
***** இரவு 7.30 மணிக்கு - வசந்த மண்டப பூஜை, தொடர்ந்து பெரும் கதை படிப்பு
***** இரவு 8 மணிக்கு விநாயகப் பெருமான் திருவீதி உலா

* 22 டிசம்பர் 2009 செவ்வாய் மாலை 5 .15 மணிக்கு விநாயகர் சஷ்டி திருவிழா

* 23 டிசம்பர் 2009 முதல் 01 ஜனவரி 2010 வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு திருவெம்பாவை உற்சவம்  

* 28 டிசம்பர் 2009 திங்கள்  மாலை 5.30 மணிக்கு மார்கழி மாத கார்த்திகை விரதம்  

*29 டிசம்பர் 2009 செவ்வாய் மாலை 5 மணிக்கு பிரதோஷம்

* 31 டிசம்பர் 2009 வியாழன் மாலை 6 மணிக்கு பூரணை விரதம்; 7 .30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு  

* 01 ஜனவரி 2010  வெள்ளி

***** திருவாதிரை உற்சவம்
***** அதிகாலை 5 மணிக்கு திருவெம்பாவை 10 வது நாள் ஸ்ரீ நடராஜப்பெருமானுக்கு விசேட பூஜைகளுடன் ஆருத்திரா தரிசனம் நடைபெற்று ஸ்ரீ நடராஜப்பெருமான் திருவீதி உலா

***** ஆங்கிலப் புது வருடம் மகா கணபதி ஹோமம்
*****  காலை 9 .00 மணிக்கு மகா கணபதி ஹோமம்; பங்குகொள்ள ஆலயத்தை 6345 8176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

* 04 ஜனவரி 2010 வெள்ளி சங்கடஹர சதுர்த்தி 

 ( துல்லியமான மற்றும் மேலதிக விவரங்களுக்கு ஆலயத்தை 6345 8176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் )

.

சனி, 19 டிசம்பர், 2009

மார்கழி மாத திருமுறைப் பாராயண திருவீதி உலா (16 டிசம்பர் 2009)

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு அன்றும் இரவு 7.30 மணிக்கு ஆலயத்தில் திருமுறைப் பாராயண திருவீதி உலா நடைபெறுவது வழமை. ஆலயச் செயலாளர் துவக்கி வைக்க, ஆலய ஒதுவார் மூர்த்தி அவர்கள் தலைமையில் அடியார்கள் திருமுறையை பாரயணம் செய்த வண்ணம் திருவீதி உலா செய்து, இரவு 8.45 மணிக்கு சிறப்பு பூஜையுடன் நிறைவு செய்வார்கள்.

அவ்வகையில் 16 டிசம்பர் 2009 அன்று, மார்கழி மாத திருமுறைப் பாராயணம் நடைபெற்றது.

இனி படமும் காணொளியும்

செவ்வாய், 1 டிசம்பர், 2009

கார்த்திகை தீபத் திருவிழா (01 டிசம்பர் 2009)

"கார்த்திகைத் திங்களில் நிறைமதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடி வரும் நாள் திருக்கார்த்திகை நாளாகும். செல்வத்தின் அதிபதி திருமாலும், கல்வியின் அதிபதி பிரம்மாவும், தம்முள் யார் பெரியவர் என வாதிட்டபடி இருந்த போது அவர்களுக்கு நடுவில் நீண்டு உயர்ந்த தீ மலையாக நின்றான் சிவபெருமான். திருமால் பன்றியாகி அடி தேடியும் பிரமன் அன்னப்பறவையாகி முடி தேடியும் தோற்றபோது தம்மால் அறியப்பட முடியாத இன்னொரு பொருளும் உண்டு என உணர்ந்து தம் செருக்கு நீங்கினர். இறைவன் ஒளி மலையாக நின்ற நிகழ்வைக் குறிப்பதே கார்த்திகை விழா.

'விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்...' என்று திருஞானசம்பந்தர் இவ்விழாவைக் குறித்துப் பாடுகின்றார். மேலும் பல பதிகங்களில் 'மாலறியா, நான்முகனும் காணா' மலை எனச் சிவபெருமான் அண்ணாமலையாக நின்ற செய்தியைக் கூறுகின்றார்.

இந்நாளில் திருவண்ணாமலையில் பெருவிளக்கு ஏற்றியும் உலகெங்கும் உள்ள சைவ அன்பர்கள் வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றியும் சிவத்தை வழிபடுவர். ஒளி அறிவையும் இருள் அறியாமையையும் குறிக்கும். சிவபெருமான் அறிவின் மூலம், அவன் அறிவிக்க உயிர்கள் அறியும் என்னும் சித்தாந்தக் கோட்பாட்டை விளக்குவது கார்த்திகை விளக்கீடு."

- "சித்தாந்த சைவம்" என்ற நூலில் முனைவர் நாகப்பன் ஆறுமுகம்.

இனி செண்பக விநாயகர் ஆலய கார்த்திகை விழா காணொளியும் புகைப்படமும்....